கொரோனா தடுப்பு மருந்துகளை காட்டிலும், முகக்கவசம் அணிவதே சிறந்த பாதுகாப்பு தரும்-ராபர்ட் ரெட்பீல்ஃடு

0 1665
தடுப்பு மருந்துகளை காட்டிலும், முகக்கவசங்களே கொரோனாவிலிருந்து சிறந்த பாதுகாப்பை தருவதாக அமெரிக்காவின் மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குநர் ராபர்ட் ரெட்பீல்ஃடு தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்துகளை காட்டிலும், முகக்கவசங்களே கொரோனாவிலிருந்து சிறந்த பாதுகாப்பை தருவதாக அமெரிக்காவின் மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குநர் ராபர்ட் ரெட்பீல்ஃடு தெரிவித்துள்ளார்.

செனட் சபை உதவி குழு எம்.பிக்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், முகக்கவசங்களே நமது ஆக சிறந்த அரண்கள் எனவும், அதற்கு தங்களிடம் அறிவியல் பூர்வ ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்துக நடப்பாண்டு இறுதி அல்லது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், ஆரம்பகட்ட தடுப்பு மருந்துகள் அவ்வளவு வீரியத்துடன் கொரோனாவை தடுக்குமென உறுதிபட கூற முடியாது என ஆராய்ச்சியாளர்களும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தெரிவித்துள்ளனர்.

எனவே தடுப்பு மருந்துகள் வந்தாலும், முகக்கவசம் அணிவதை தொடர வேண்டும் என ராபர்ட் ரெட்பீல்ஃடு  வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments