தீவிரவாதத்தின் புகலிடமான பாகிஸ்தான் பாடம் கற்பிப்பதா? - பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

0 2663
தீவிரவாதத்தின் புகலிடமான பாகிஸ்தான் பாடம் கற்பிப்பதா? - பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

பயங்கரவாதத்தின் மையமாக உள்ள பாகிஸ்தான் இடமிருந்து, உலகிற்கு மனித உரிமைகள் தொடர்பான படிப்பினைகள் வேண்டியதில்லை என இந்தியா கண்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் மனித உரிமைகள் கவுன்சிலுக்கான இந்திய முதன்மைச் செயலாளர் செந்தில் குமார் பங்கேற்று பேசினார். அப்போது, பிறருக்கு பாடம் எடுப்பதற்கு முன்பு, பயங்கரவாதம் தான் மனித உரிமை மீறலின் மிக மோசமான வடிவம் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்தியாவிற்கு எதிராக ஆதாரமற்ற மற்றும் தவறான கருத்துக்களை தெரிவிக்க பாகிஸ்தான் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதாகவும், இது அவர்களின் எதிர்மறையான மற்றும் குழம்பிய மனநிலையை காட்டுவதாகவும் செந்தில் குமார் குற்றம்சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments