விவசாயத்துறை சீர்திருத்தங்களால் சிறிய விவசாயிகள் அதிகம் பயனடைவர் - பிரதமர் மோடி

0 1111
விவசாயத்துறை சீர்திருத்தங்களால் சிறிய விவசாயிகள் அதிகம் பயனடைவர் - பிரதமர் மோடி

விவசாயத்துறை சீர்திருத்தங்களால், சிறிய மற்றும் ஒடுக்கப்பட்ட விவசாயிகள் (marginalized farmers) அதிக அளவில் பயனடைவர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தீனதயாள் உபாத்யாய பிறந்ததினத்தையொட்டி காணொலி மூலம் பாஜகவினருடன் பேசிய அவர்,  நாட்டில் உள்ள விவசாயிகளில் 100 பேரில் 85 பேர் சிறிய மற்றும் ஒடுக்கப்பட்ட விவசாயிகள்தான் என்றும், மத்திய அரசின் சீர்திருத்தங்களால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர் என்றும் கூறினார்.   

மண்டியில் மட்டுமே தங்கள் விவசாய பொருள்களை விவசாயிகள் விற்று வந்ததாகவும், தற்போது பொருள்களை விற்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது என்றும் மோடி கூறினார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments