ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற்றது ரெங்கநாச்சியார் திருவடி சேவை

0 865
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் ரெங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெற்றது. சாதாரண நாட்களில் ரெங்கநாச்சியார் பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் ரெங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெற்றது. சாதாரண நாட்களில் ரெங்கநாச்சியார் பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும்.

ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நடைபெற்றது.

தாயார் சாய்கொண்டை, வைர பதக்கம், பவளமாலை, கிளி மாலை, கையில் தங்கக்கிளி, காலில் தங்க கொலுசு அணந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments