மும்பை கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு

0 1475
மும்பை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.

மும்பை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.

பிவான்டி பகுதியில் இருந்த மிகவும் பழைமையான அக்கட்டிடம் திங்கள்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து 3 நாள்களாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மும்பை உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மீட்பு பணி நடைபெறும் பிவான்டியிலும் மழை பெய்கிறது. அந்த மழைக்கு மத்தியிலும் மீட்புப் பணி நீடிக்கிறது. இதுவரை 25 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments