ஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் ஆடைகளை இழுக்கும் கஞ்சா குடுக்கீஸ்..! பட்டபகலில் ஈவ்டீசிங் கொடுமை

0 31825
சென்னை நெல்சன்மாணிக்கம் சாலையில் பட்டபகலில் ஸ்கூட்டரில் சென்ற யோகா ஆசிரியையின் ஆடைகளை பிடித்து இழுத்து கஞ்சா பாய்ஸ் இருவர் ஈவ்டீசிங்க்கில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நெல்சன்மாணிக்கம் சாலையில் பட்டபகலில் ஸ்கூட்டரில் சென்ற யோகா ஆசிரியையின் ஆடைகளை பிடித்து இழுத்து கஞ்சா பாய்ஸ் இருவர் ஈவ்டீசிங்க்கில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா போதை கும்பலின் அட்டூழியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை நெல்சன்மாணிக்கம் சாலையில் இருந்து அண்ணா நகரை நோக்கி யோகா ஆசிரியை ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பைக்கில் பின் தொடர்ந்த கஞ்சா போதை பாய்ஸ் இருவர் ஆசிரியையின் டி.சர்ட்டையும், பேண்டையும் பிடித்து இழுத்து ஈவ்டீசிங் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஹேண்ட் பேக்கை பிடித்து இழுத்ததால் பயந்து போன ஆசிரியை ஸ்கூட்டரின் வேகத்தை குறைத்துள்ளார். உடனடியாக குறுகே வாகனத்தை நிறுத்தி மறித்த அந்த இருவரும் மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு தப்பி உள்ளனர்.

பதறிப்போன ஆசிரியையோ, பாலத்தில் இறக்கத்தில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார்.

யோகா ஆசிரியையிடம் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட ரோமியோக்களை அடையாளம் கண்டு கைது செய்தவதாக உறுதி அளித்துள்ளனர்.

யோகா ஆசிரியை மட்டுமல்ல , இரு சக்கர வாகனங்களில் ஆளில்லா சாலையில் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு சில்மிஷங்களில் ஈடுபடுவதற்கென்றே இரு சக்கரவாகனத்தில் கஞ்சா போதை புள்ளீங்கோஸ் சிலர் சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

பெரும்பாலான பெண்கள் வெளியே சொன்னால் அசிங்கம் என்று புகார் அளிக்க முன்வருவதில்லை என்றும் தலை நகரில் கஞ்சா விற்பனை சகஜமாக நடப்பதால் காலையிலே கஞ்சா குடித்து விட்டு அரை போதையில் ஊர் சுற்றும் சின்ன பசங்க இது போன்ற ஈவ் டீசிங் சேட்டைகளின் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திவரப்படும் நிலையில் அண்ணா நகரையொட்டியுள்ள டிபி சத்திரம் பகுதி நீண்ட காலமாக கஞ்சா கோட்டையாக விளங்குவதாக கூறப்படுகின்றது.

தீவுத்திடல் குடியிருப்பு, போர் நினைவுச்சின்ன குடியிருப்பு, வட சென்னையின் சில பகுதிகள் கஞ்சாவியாபாரிகளின் சொர்க்க பூமியாக விளங்குவதால் காவல்துறையினரால் கஞ்சா விற்பனையை முழுவதுமாக தடுக்க இயலாத சூழல் நிலவுகின்றது என்றும் ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் பல குடிமகன்கள் கஞ்சா போதைக்கு அடிமையானதால் நகரின் கஞ்சா குடுக்கிகளால் நிகழும் குற்றங்களும் பெருகிவருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் பெரு நகர சென்னை காவல்துறையினர் கிலோ கணக்கில் கஞ்சா கடத்தலை பிடித்தாலும் டன்கணக்கில் நகருக்குள் கடத்தி வந்து தட்டுப்பாடில்லாமல் விற்கப்படும் கஞ்சா விற்பனையை நிரந்தரமாக தடுத்தால் மட்டுமே குற்றங்களில் எண்ணிக்கை குறையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

இந்த ஈவ்டீசிங் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட யோகா ஆசிரியை சற்று தைரியமானவர் என்பதால் துணிச்சலுடன் புகார் அளிக்க முன் வந்திருப்பதாகவும், விரைவாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கஞ்சா போதையில் பைக்கில் பறக்கும் புள்ளீங்கோக்களை சுற்றி வளைத்து காவல்துறையினர் சிறப்பாக கவனிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments