கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்குகிறது - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

0 19048
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட வேண்டும் என்றும்,  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் நவம்பர் 1ஆம் தேதி தொடங்கும் என்றும் முதல் பருவத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி முதல் 26ஆம் தேதிக்குள் நடத்தப்பட்டு, ஏப்ரல் 4ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதிக்குள் நடத்தப்பட்டு, விடுமுறை விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments