ராமநாதபுரம் மாவட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

0 1133
ராமநாதபுரம் மாவட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

ராமநாதபுரத்தில் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளின் சார்பாக 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 844 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இதேபோல, சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 220 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments