பறவையை விழுங்கும் ராட்சத சிலந்தி

0 1181

பறவை ஒன்றை ராட்சத சிலந்தி பூச்சி விழுங்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரெட்டிட்டில் (Reddit) முதலில் வெளியான அந்த வீடியோ, டுவிட்டரிலும் தி டார்க் சைட் ஆப் நேச்சர் (the dark side of nature) என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. வீடியோவில் கருப்பு நிறத்தில், அதிக முடிகளுடன் மிகப்பெரிதாக இருக்கும் சிலந்தி, தென் அமெரிக்க நாடுகளில் வாழும் டாரன்டுலா( tarantula) இனத்தை சேர்ந்தது என்று ஜெர்மனியில் உள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments