எஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்-எஸ்.பி.பி. சரண்

0 3718
பிரபல பின்னணி பாடகர் S.P. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக அவரது மகன் S.P.B சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் S.P. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக அவரது மகன் S.P.B சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட S.P. பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி, சென்னை - MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

S.P. பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை குறித்து, S.P.B சரண் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், தனது தந்தை விரைந்து குணம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.

மருத்துவர்கள் உதவியுடன் தனது தந்தை சில நிமிடங்கள் எழுந்து உட்கார்ந்ததாகவும், இயல்பாக உணவு உட் கொள்ள முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். S.P. பாலசுப்பிரமணியத்தை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் S.P.B சரண் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments