சவூதியில் பிச்சை எடுத்த 450 இந்தியர்கள் தடுப்பு காவல் மையங்களில் அடைப்பு

0 2046
சவூதியில் பிச்சை எடுத்த 450 இந்தியர்கள் தடுப்பு காவல் மையங்களில் அடைப்பு

சவூதி அரேபியாவில் வேலையிழந்ததால் பிச்சை எடுத்த இந்தியர்கள் 450 பேர், தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அவர்களின் பணி விசா அண்மையில் முடிவடைந்ததாகவும், இருப்பினும் நாடு திரும்ப விரும்பாமல் சாலைகளில் பிச்சை எடுத்து வந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் பிச்சை எடுக்கும் வீடியோ வைரலானதையடுத்து அவர்களை அடையாளம் கண்டுபிடித்து, பணி விசா முடிந்தும் தங்கியிருந்ததற்காக தடுப்புக் காவல் மையங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments