ஐ.பி.எல். தொடர் இன்று தொடக்கம்.. முதல்ஆட்டத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதல்

0 2676
நடப்பாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன், அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன், அபுதாபியில் இன்று தொடங்குகிறது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்று இருக்க வேண்டிய நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்கள் கழித்து இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

வழக்கமாக ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், நடன அழகிகள் என உற்சாகமாக நடைபெறும் ஐபிஎல் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு கொண்டாட்டங்கள் எதுவுமின்றி, மைதானத்தில் ரசிகர்களுக்கும் அனுமதியின்றி எளிமையான முறையில் நடைபெற உள்ளது. 53 நாட்கள் நடைபெற உள்ள இந்த தொடரில் 8 அணிகளுக்கு இடையே 56 லீக் போட்டிகளும், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையே பிளே ஆப் போட்டிகளும் நடைபெற உள்ளன.

அபுதாபியின் ஷேக் சையது மைதானத்தில், மாலை 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு பதிலடி தர சென்னை அணி முனைப்பு காட்டும் என்பதோடு, சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் முதல் போட்டியே அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கை அடுத்து 200 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியின் சர்வதேச வீரர்கள் முதல் முறையாக இன்று களமிறங்க உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments