சீனாவில் இருந்து ரசாயன இறக்குமதியை அடியோடு நிறுத்த மத்திய அரசு புதிய திட்டம்...

0 6226
ரசாயன இறக்குமதியில் சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ரசாயன இறக்குமதியில் சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மருந்து, பூச்சி மருந்து தயாரிப்பு மற்றும் சில முக்கிய தொழில்களுக்கு தேவையான ரசாயனங்கள் இப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வகையில் 75 வகையான ரசாயனங்களை சீனா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இப்போது சீனாவுடனான மோதல் வலுத்துள்ளதை அடுத்து, அந்நாட்டை சார்ந்திருக்கும் போக்கை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உள்நாட்டு ரசாயன உற்பத்தியை அதிகரிக்கலாம் என திட்டமிடப்பட்டது.

இதையடுத்து உள்நாட்டில் ரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கவும்,உற்பத்தி செலவில் 10 சதவிகித த்தை ஊக்கத் தொகையாக வழங்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாயை செலவிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments