சுசாந்த் சிங் வழக்கு-முன்னாள் பெண் மேலாளர் உள்ளிட்ட 2 பேருக்கு என்சிபி சம்மன்

0 360

இந்தி நடிகர் சுசாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில், அவருடைய முன்னாள் பெண் மேலாளர் ஸ்ருதி மோடி, திறன் மேலாளர் ஜெயா சாஹாவுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே இந்தி நடிகையும், சுசாந்தின் காதலியுமான ரியா சக்ரவர்த்தி, அவருடைய சகோதரர் சவீக்கை என்சிபி எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது ஸ்ருதி மோடி, ஜெயா சாஹாவுக்கு இன்றைய விசாரணையில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்கள் இருவரிடமும் சிபிஐ,அமலாக்கத்துறை மற்றும் மும்பை போலீஸ் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments