மிளகாய் பொடியை தூவி வைர மோதிரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது

0 945

திண்டிவனம் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புடைய 4 வைர மோதிரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஆந்திராவில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசாரங்குப்பம் கருணாநிதி, தனது நண்பர் பிரகலாதன் மற்றும் புரோக்கர் அருள்முருகன் அனுப்பிய 2 பேருடன் காரில் வைர மோதிரங்களை விற்க கடந்த 13ம் தேதி சென்றார்.

அப்போது இன்டிகா கார் ஒன்று திடீரென குறுக்கிடவே அதிர்ச்சியடைந்து காரை நிறுத்தியபோது, அருள்முருகன் அனுப்பிய 2 பேர் மிளகாய் பொடியை தூவியும், கத்தியை காட்டி மிரட்டியும் கொள்ளையடித்து தப்பினர். இன்டிகா கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தீவனூர் காளிதாசுக்கு சொந்தமானது என்பதையும், அவருடைய மகன் பரந்தாமன், புரோக்கர் அருள்முருகன் உள்ளிட்டோர் கொள்ளையில் ஈடுபட்டதையும் கண்டுபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments