மணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா..? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

0 1354
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வது போல, தமிழகம் முழுவதும் மணல் விற்பனையையும் அரசே ஏற்று நடத்தலாம் என யோசனை தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மணல் கடத்தல் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தூங்குகிறதா ? என கேள்வி எழுப்பியுள்ளது.

சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சத்தியநாரா யணன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது,உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகபட்சமாக கிராம நிர்வாக அதி காரிகள், மின்துறை அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட் டிய நீதிபதிகள், மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என அடுக்கடுக் கான பல கேள்விகளை எழுப்பினர்.

இது தொடர்பாக, தமிழக அரசு விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments