அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக முப்பெரும் விழா - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 1053
திமுக முப்பெரும் விழா, நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முப்பெரும் விழா, நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என மூன்று விழாக்களையும் இணைத்து, முப்பெரும் விழா கொண்டாடப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது பெறுபவர்கள் பட்டியலையும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஊரடங்குக் கால விதிமுறைகளை மீறிடாமல், பாதுகாப்பும் - தனிமனித இடைவெளியும் கொண்ட வகையில், நாளை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், முப்பெரும் விழாவினை, சீரும் சிறப்புமாக நடத்தித் தருமாறு கட்சித் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments