அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவளித்து படகு பேரணி

0 481
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவளித்து படகு பேரணி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக லூசியானா மாநிலத்தில் படகு அணிவகுப்பு நடைபெற்றது.

பொன்சார்ட்ரெய்ன் ஏரியில், அதிபர் ட்ரம்பின் பெயரை கொண்ட கொடிகளுடனும், மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் உள்ளிட்ட ஆதரவு கோஷங்களுடனும் 10க்கும் மேற்பட்ட படகுகள் ஈடன் தீவுகளுக்கு மத்தியில் இயக்கப்பட்டன.

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபராக வேண்டும் என்று கரையில் இருந்தவர்களும் கொடிகளை அசைத்தபடி கோஷமிட்டனர்.

மேலும் சிலர் டொனால்டு ட்ரம்பின் உருவப் பொம்மைக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments