மிளகாய்ப் பொடி தூவி ரூ.2 கோடி மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை

0 20646
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கத்தியை காட்டி மிரட்டியும், மிளகாய்ப் பொடி தூவியும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கத்தியை காட்டி மிரட்டியும், மிளகாய்ப் பொடி தூவியும்  2 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  

விழுப்புரம் மாவட்டம் ஆசாரம்குப்பத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தனது 4 பூர்வீக வைர மோதிரங்களை விற்பதற்காக சென்னையை சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்தார். இதன்படி நேற்று மாலை அந்த இடைத்தரகர்களை, திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் சந்தித்த கருணாநிதி காரில் சென்று நகையை காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பணம் தருவதற்காக அருகே உள்ள தீவனூர் சாலைக்கு, அந்த கும்பல் கருணாநிதியை அழைத்துச் சென்றுள்ளது.

இதனை நம்பி சென்ற கருணாநிதி மற்றும் அவரது நண்பருமான பிரகலாதன் ஆகியோரை அந்த கும்பல் திடீரென கத்தியை காட்டி மிரட்டியது மட்டுமின்றி அவர்களின் கண்களில் மிளகாய் பொடியையும் தூவி விட்டு வைர மோதிரங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த சங்கிலி உள்ளிட்டவைகளை பறித்து கொண்டு ஓடி விட்டது.

பறிபோன வைர மோதிரங்களின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த விஷயத்தில் தரகர்களாக செயல்பட்ட 2பேரை கருணாநிதி போலீசில் பிடித்து கொடுத்துள்ளார். அவர்களிடமும் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments