கோவை வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் சுற்றி வரும் காட்டு யானை - சிகிச்சை அளிக்க விரைந்த மருத்துவக் குழுவினர்

0 735
கோவை வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் சுற்றி வரும் காட்டு யானை - சிகிச்சை அளிக்க விரைந்த மருத்துவக் குழுவினர்

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் காட்டுயானைக்கு சிகிச்சை அளிக்க உதவிக்கு வந்த கும்கி யானை பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. நெல்லித்துறையில் காயங்களுடன் சுற்றித்திரியும் ஆண் காட்டுயானையின் சிகிச்சைக்கு உதவ சாடிவயல் முகாமிலிருந்து சுயம்பு என்னும் கும்கி யானை மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டது.

அங்கிருந்து நெல்லித்துறைக்கு கும்கி யானையை பவானி ஆற்றின் வழியாக அழைத்துச் சென்றபோது நீர்வரத்து அதிகரித்ததால் யானை தத்தளித்தது.

ஆற்றில் தண்ணீர் குறைந்தால் மட்டுமே கும்கி யானையை அழைத்து செல்ல முடியும் என்பதால் மாற்று திட்டம் குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.மேலும் டாப்சிலிப் முகாமில் இருந்து மேலும் ஒரு யானை வரவுள்ள நிலையில் இரண்டையும் ஒன்று சேர்த்து அழைத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments