கொரோனா பாதிப்பு 2021ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என அமெரிக்க மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை

0 1211
கொரோனா பாதிப்பு 2021ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என அமெரிக்க மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை

கொரோனாவின் பேரிடர் 2021ம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்று அமெரிக்காவின் மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய அந்நாட்டின் தொற்றுநோய் நிபுணரான அந்தோனி பாவுசி, தினமும் 40 ஆயிரம்பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும் தினம்தோறும் ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியதை அவர் மறுத்துள்ளார்.

இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று வரலாற்றிலே மிகப்பெரிய உலகளாவிய சவால்களில் ஒன்று என ஐநா.சபை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments