சுஷாந்த் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் பேரணி

0 1968
சுஷாந்த் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் பேரணி

நடிகர் சுஷாந்த் மரண வழக்குடன் தொடர்புடைய போதை பொருள் புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரபர்த்திக்கு ஆதரவாக கொல்கத்தாவில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

வங்காளத்தின் மகளான ரியா சக்கரப்பர்த்திக்கு எதிரான சதிச் செயல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள மேற்கு வங்க காங்கிரஸ், அந்த கருத்தை உறுதிபடுத்தும் வகையில், பிரமாண்ட பேரணியையும் நடத்தியுள்ளது.

முன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அரசியல் ஆதாரங்களுக்காக இந்திய நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தை பீகார் நடிகராக சித்தரிக்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும், இந்த விவகாரத்தில் நடிகை ரியா கைது செய்யப்பட்டது நகைப்புரியது என்றும் கூறியிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments