ரஜினி கட்சி தொடங்கினாலும் 2021இல் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் - ஜெயக்குமார்

0 1585
ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடக்கி வைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவில் கட்சிப் பதவிகளில் பட்டியலினத்தவருக்கு உரிய பொறுப்புகள் வழங்குவதில்லை எனத் தெரிவித்தார்.

முன்னதாக் கிண்டியில் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் அலுவலகத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய ஜெயக்குமார், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை அதிமுக வரவேற்கும் என்றும், மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments