குடிப்பதை தட்டிக்கேட்ட மனைவி தம்பிள்ஸ் கொண்டு தாக்கிய கணவன்

0 2178
குடிப்பதை தட்டிக்கேட்ட மனைவி தம்பிள்ஸ் கொண்டு தாக்கிய கணவன்

ஆந்திராவில் குடிப்பதை தட்டிக்கேட்ட மனைவியின் தலையில் உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் தம்பிள்ஸ் கொண்டு தாக்கிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொவ்வூரை சேர்ந்தவன் சீனு. அரசுப் பேருந்து ஓட்டுநரான சீனு, குடிக்கு அடிமையானவன் என்று கூறப்படுகிறது.

அவனது குடிப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட மனைவி மாதவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சீனு, போதையில் நேற்று உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் தம்பிள்ஸ் என்ற கருவியைக் கொண்டு அவரது தலையில் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாதவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சீனுவை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments