போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு விவகாரம் நடிகை ரியாவின் ஜாமின் மனு மீது சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

0 658
போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு விவகாரம் நடிகை ரியாவின் ஜாமின் மனு மீது மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புகொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, நடிகை ரியாவின் ஜாமின் மனு மீது மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

மறைந்த நடிகர் சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரபர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் உள்ளிட்டோர் போதைப் பொருள் தடுப்பு துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சுஷாந்திற்காக ஷோவிக் போதைப் பொருள் வாங்கியதாகவும், அதற்கு ரியா பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது, மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments