வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

0 1390
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை வரை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழையும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 21 சென்டி மீட்டர் மழையும், நாமக்கல்லில் 13 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கேரளக் கடலோரம், லட்சத்தீவு, தென்மேற்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments