வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி என்பதே மக்களின் தீர்மானம்- அமைச்சர் ஜெயக்குமார்

0 961
வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி என்பதே மக்களின் தீர்மானம்- அமைச்சர் ஜெயக்குமார்

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் தீர்மானம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை கொத்தவால் சாவடி, துறைமுகம் பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.

வளர்ந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவு குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது பற்றி குறிப்பிட்ட ஜெயக்குமார், கடனை வட்டியுடன் திருப்பி செலுத்துகின்ற மாநிலம் தமிழகம் என்பதால் ரிசர்வ் வங்கி எப்போதும் போல் நிதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments