இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43 லட்சத்தைக் கடந்தது

0 787
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது.

மொத்தம் 43 லட்சத்து 67 ஆயிரத்து 436 பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 73 ஆயிரத்தை எட்டியுள்ளது. சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில் இதுவரை 72 ஆயிரத்து 775 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை பல்வேறு மாநில அரசுகள் வெளியிட்ட அறிவிப்புகளைக் கணக்கிட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை 73 ஆயிரத்தை தொட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில்  உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments