வீட்டில் குவாரன்டைனா? கண்காணிப்பு கிட் தயார்..!

0 3448
கொரோனா வைரஸின் தாக்கம் மிக குறைவாக இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, தங்களை கண்காணித்து கொள்வதற்கான பராமரிப்பு கிட்டுகளை 2500 ரூபாய் என்ற விலையில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் மிக குறைவாக இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, தங்களை கண்காணித்து கொள்வதற்கான பராமரிப்பு கிட்டுகளை 2500 ரூபாய் என்ற விலையில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் மிக குறைவாக இருப்பவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கான சுய கண்காணிப்பு பெட்டகத்தை சென்னை தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பெட்டகத்தில் பல்சி ஆக்ஷி மீட்டர், தெர்மா மீட்டர், கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், முககவசம் உள்ளிட்ட 14 நாட்களுக்கான தேவையான மருத்துவ பொருட்கள் உள்ளன. இதன் விலை 2500ரூபாய் ஆகும்.

இந்த பெட்டகத்தை வாங்கி செல்பவர்களுக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை,மருந்துகளை எவ்வாறு கையாள வேண்டும் ஆகியன 14 நாட்களில் 5 முறை வழங்கப்படுகிறது.

இந்தபெட்டகத்தை வாங்க விரும்புபவர்கள், 73388 35555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் வீட்டுக்கே சென்று கொடுப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments