புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா தேரோட்டம் பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது

0 1139
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தேர் பவனி பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தேர் பவனி பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.

அதன் முக்கிய நிகழ்வான தேர் பவனி, திங்கட்கிழமை நடைபெற்றது. முன்னதாக நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டு பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரானது, வழக்கமான வழித்தடங்களைத் தவிர்த்து, ஆலயத்தை மட்டும் சுற்றி வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடக்கும் தேர் பவனி, இந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments