கோவையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், 2 பேர் பலி..!

0 3813
கோவை கே.சி.தோட்டம் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

கோவை கே.சி.தோட்டம் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

அப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக செட்டி வீதியில் இருந்த, பழைய கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாரின் முயற்சியின் பேரில், 6வயது சிறுவன் உட்பட 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, சாலினி மற்றும் கோபால்சாமி எனும் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments