செப். 9ல் கூடும் திமுக பொதுக்குழுவில் அரங்கிற்குள் செல்போன் எடுத்துச்செல்ல பிரதிநிதிகளுக்கு தடை

0 8971
வருகிற 9 ஆம் தேதி கூடும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள், கூட்ட அரங் கிற்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வருகிற 9 ஆம் தேதி கூடும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகள், கூட்ட அரங்கிற்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு மற்றும் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் யுக்தி உள்ளிட்ட பல் வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க, திமுக பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது. 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட வாரியாக பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் தனித்தனி கூட்ட அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காலை 10 மணி க்கு துவங்கும் பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 500 பேர் வரை கலந்து கொள்வார்கள்.  திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில், காணொலி மூலம் பொதுக்குழு கூட்டப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments