லெபனான் வெடிவிபத்து ; சிதைந்த கட்டடத்தில் நோட்டமிட்ட மோப்பநாய், 3 நாள் தேடுதலுக்கு பின் யாரும் உயிருடன் இல்லை என மீட்பு குழு அறிவிப்பு

0 697
லெபனான் வெடிவிபத்தில் 3 நாள் தேடுதலுக்கு பின் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மீட்பு குழு அறிவிப்பு

லெபனானின் பெய்ரூட் நகரில் வெடிவிபத்தால் இடிந்த கட்டடம் ஒன்றில் யாரேனும் சிக்கியிருக்க கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில், 3 நாட்கள் தேடுதலுக்கு பின் யாரும் உயிருடன் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

191 உயிர்களை பலிவாங்கிய பெய்ரூட் வெடிவிபத்து நிகழ்ந்து ஒரு மாதம் ஆன போதும், 7 பேர் மாயமானோர் பட்டியலில் நீடிக்கின்றனர்.

புதனன்று சிலி மீட்பு குழுவினரின் மோப்பநாய் சிதைந்த கட்டிடம் ஒன்றின் அடியில், யாரேனும் சிக்கியிருக்க கூடும் என்பது போல் அந்த பகுதியை வட்டமடித்தது.

இதையடுத்து உயர்தொழில்நுட்ப சென்சார் மூலம் ஆய்வு செய்தபோது, இதயதுடிப்பு இருப்பதற்கான சிக்னல்களை காட்டியதால், தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இடிபாடுகளை அகற்றி தீவிரமாக தேடியும் அங்கு யாருமில்லாததால், 3 நாட்களுக்கு பின் அங்கு யாரும் உயிருடன் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments