சென்னைப் பல்கலை., இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு

0 4869

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் வரும் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் தவிர அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பில், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் முடிவுகள் அக்டோபர் 14ம் தேதி வெளியிடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments