55 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு, 5 ஆண்டு புதுப்பிக்கத்தக்க விசா - துபாய் அரசு

0 2214
55 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு, 5 ஆண்டு புதுப்பிக்கத்தக்க விசா - துபாய் அரசு

55 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் 5 ஆண்டு புதுப்பிக்கத்தக்க விசா வழங்கப்படும் என்று துபாய் அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் வெளிநாட்டவர்களை கொண்ட துபாயில், கொரோனா பாதிப்பு காரணமாக வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்வோர் மற்றும் பிற நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கு தீர்வு காணும் விதமாகவும் வெளிநாட்டவர்களின் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டும் புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் மாதச் சம்பளம் உள்ளவர்கள், 2 கோடி ரூபாய் சேமிப்பு வைத்துள்ளவர்கள், துபாயில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்துள்ளவர்களுக்கு புதுப்பிக்கத்தக்க விசா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments