தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - சதி என உறவினர்கள் சந்தேகம்

0 1605
தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - சதி என உறவினர்கள் சந்தேகம்

சேலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம், திட்டமிட்ட சதி என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குரங்குச்சாவடி பகுதியில் மர அறுவை ஆலை அதிபர் வீட்டில்  ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சதிச்செயலாக இருக்கும் என உயிரிழந்த கார்த்திக்கின் உறவினர் பிரகாசம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

உரிய விசாரணை நடத்தி நீதி கிடைக்க உதவ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments