பிரேசிலில் பணத்தேவை அதிகரிப்பால்.. புதிய 200 ரைஸ் கரன்சி நோட்டுகள் வெளியீடு..!

0 1614
பிரேசிலில் கொரோனா தொற்று காரணமாக பணத் தேவை அதிகரித்துள்ளதால் புதிய 200 ரைஸ் கரன்சி நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்று காரணமாக பணத் தேவை அதிகரித்துள்ளதால் புதிய 200 ரைஸ் கரன்சி நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலையடுத்து நாட்டில் பண தேவை மற்றும் பதுக்கல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்நாட்டின் சென்ட்ரல் வங்கியின் தலைவர் ராபர்டோ காம்போக்ஸ் நெட்டோ (Roberto Campos Neto), இதற்கு தீர்வு காணும் பொருட்டு 200 ரைஸ் கரன்சிகளை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு 45 கோடி புதிய கரன்சி நோட்டுகள் அச்சிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய இந்திய மதிப்பில், 2 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்புள்ள இந்த கரன்சி நோட்டுகளை கடைகளில் மாற்றுவது கடினம் என்று பொதுமக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments