இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்-மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0.5 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், 2 சதவீதம் பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றரை சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments