கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு.. விரைவில் இடைத்தேர்தல்..!

0 2161

கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமார் மறைவை அடுத்து, அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார், உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். இதன் காரணமாக, கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளது என்ற விவரத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தி உள்ளார்.

விதிமுறைகளின் படி காலியாக உள்ள தொகுதிக்கு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன் படி பிப்ரவரிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments