துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 9.5லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

0 533

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஏர் இந்தியா விமானத்தில் வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்துல் சலீம் என்பவரது பொருட்களைச் சோதனையிட்ட போது, அவர் ஏராளமான சாவிகளைக் கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது. அவற்றை ஆய்வு செய்த போது அனைத்தும் தங்கத்தினால் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்பதரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 301 கிராம் எடை கொண்ட தங்க சாவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments