தமிழ்நாட்டில் இன்று 5892 பேருக்கு கொரோனா உறுதி.. 92 பேர் பலி..!

0 3138
தமிழ்நாட்டில் இன்று 5892 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 46 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 608 ஆக அதிகரித்தது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 110 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 52 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 968 பேருக்கும், கோவையில் 593 பேருக்கும், கடலூரில் 590 பேருக்கும் , செங்கல்பட்டில் 378 பேருக்கும் , திருவள்ளூரில் 258 பேருக்கும், காஞ்சிபுரத்தில் புதிதாக 150 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments