இந்தியாவும், சீனாவும் கொரோனா சூழலைச் சாதகமாகப் பயன்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி

0 1818
சீனாவும், இந்தியாவும் கொரோனா சூழலைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொள்வதாக அமெரிக்க வெளியுறவு அதிகாரி டேவிட் ஸ்டில்வெல் தெரிவித்துள்ளார்.

சீனாவும், இந்தியாவும் கொரோனா சூழலைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொள்வதாக அமெரிக்க வெளியுறவு அதிகாரி டேவிட் ஸ்டில்வெல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையில் கிழக்காசியா மற்றும் பசிபிக் மண்டல விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டேவிட் ஸ்டில்வெல், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஊகானில் கொரோனா தொற்று பரவியதில் இருந்தே அந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தச் சீனா முயன்று வருவதாகத் தெரிவித்தார்.

கொரோனா சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனால் எல்லைச் சிக்கலுக்கு இருநாடுகளும் அமைதிப் பேச்சுக்கள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments