சாலை விபத்துக்களில் உயிரிழப்போரில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

0 940
சாலை விபத்துக்களில் உயிரிழப்போரில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

கடந்த ஆண்டில் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்களில் பெரும்பான்மையானவை அதிவேகமாக வாகனத்தை ஓட்டி சென்றதால் 86 ஆயிரத்து 241 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களில் 38 விழுக்காடு பேர் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் என்றும் என்சிஆர்பி தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு சாலை விபத்துக்களில் 59 ஆயிரத்து 499 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய அளவில் முதலிடத்தில் இருந்தாலும் முந்தைய ஆண்டில் 66 ஆயிரத்து 110 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments