ஹஃபீசின் அதிரடி ஆட்டத்தால் 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி...

0 3079
ஹஃபீசின் அதிரடி ஆட்டத்தால் 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி...

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டீ-ட்வெண்டி போட்டியில், பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்பு அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

ஹைதர் அலி, முகமது ஹபீசின் அரைசதத்தால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

டாம் பேண்டன் மற்றும் மொயீன் அலியை தவிர வேறு யாரும் பெரிதும் சோபிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், முகமது ஹபீஸ் தொடர்நாயகன் விருதினை பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments