கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - டெல்லி அரசு எச்சரிக்கை

0 550
கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - டெல்லி அரசு எச்சரிக்கை

கல்விக்கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் உள்ள சில தனியார் பள்ளிகள் கொரானாவுக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் போது, கல்விக்கட்டணம், வருடாந்திரக் கட்டணம், மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்திருந்தன.

இந்நிலையில், கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொதுமுடக்கம் நீடித்து வரும் நிலையில் லாபத்தை எதிர்பார்க்காமல் கல்வியை வழங்குமாறும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments