பிராணாப் முகர்ஜி 1935 - 2020..!

0 3420

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

மேற்குவங்க மாநிலத்தில் 1935-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி பிறந்த பிரணாப் முகர்ஜி, அரசியல், வரலாறு மற்றும் சட்டப் படிப்புகளை படித்தவர்.

ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் வழக்கறிஞராகவும் வாழ்க்கையைத் தொடங்கிய பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1969, 1975,1981,1993, 1999ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தார். பிரணாப் முகர்ஜி, 1980-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் 24 ஆண்டுகள் கழித்து, 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982-ம் ஆண்டு நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று, நாட்டின் இளம் நிதி அமைச்சர் என்ற பெருமையை தமது 47-வயதில் பெற்றார் பிரணாப் முகர்ஜி.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு காங்கிரஸை விட்டு வெளியேறி, ராஷ்டிரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார் பிரணாப் முகர்ஜி.

3 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் காங்கிரசில் ஐக்கியமானார். திட்டக்குழு துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1995-ம் ஆண்டு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், சார்க் அமைப்பின் அமைச்சர்கள் குழுவுக்குத் தலைவராகவும் பணியாற்றினார்.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், அதன் பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சரானார். 2009-ம் ஆண்டு நாட்டின் நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.

2012ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்றார். 5க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments