முறைசாரா பொருளாதாரத்தை அழித்து வருகிறது மோடி அரசு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

0 819
முறைசாரா பொருளாதாரத்தை அழித்து வருகிறது மோடி அரசு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

முறைசாரா பொருளாதாரத்தை மோடி அரசு கடந்த 6 ஆண்டுகளாக அழித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

லெட்ஸ் டாக் எகானமி (Lets talk economy) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களில் முறைசாரா பொருளாதாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு விரும்புவதாகவும், அதை அடிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

முறைசாரா பொருளாதாரத்தை மத்திய அரசு அழித்துவருகிறது என்பதற்கு தவறான ஜிஎஸ்டி அமல், பணமதிப்பிழப்பு மற்றும் ஊரடங்கு ஆகிய 3 முடிவுகளே மிகப்பெரிய உதாரணங்கள் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

முறைசாரா பொருளாதாரத்தை அழிக்கவே ஊரடங்கை திட்டமிட்டு அமல்படுத்தியிருப்பதாக கூறியுள்ள ராகுல், ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு இதை எதிர்த்து போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments