இத்தாலியில் நடுக்கடலில் சென்ற படலில் தீ விபத்து

0 588
இத்தாலி நாட்டில் நடுக்கடலில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி நாட்டில் நடுக்கடலில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 5பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டின் துறைமுக நகரமான Crotone பகுதியில் கடலில் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் அங்கு விரைந்து சென்ற கடலோர மீட்பு படையினர் படகில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

அந்த படகில் 20அகதிகள் இருந்தனர் என்றும் எஞ்சின் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக படகு தீப்பிடித்து எரிந்ததாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.

தீ விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments