தமிழகத்தில் மேலும் 6495 பேருக்கு கொரோனா

0 3906
தமிழகத்தில் மேலும் 6495 பேருக்கு கொரோனா

தமிழகத்தில், மேலும் 6 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இது வரை பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 22  ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. 

ஒரே நாளில் 94 பேர் நோய் தொற்றுக்கு பலியானதால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக் கை 7 ஆயிரத்து  231 ஆக உயர்ந்தது. சென்னையைச் சேர்ந்த 3 வயது சிறுமியும், 98 வயது முதியவரும், கொரோனாவுக்கு பலியாயினர்.

வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 406 பேர் குணம டைந்துள்ளனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 249  பேர் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டு உள்ளனர்.

கோவையில் புதிதாக 498 பேரும், செங்கல் பட்டில் 419 பேரும், கடலூரில் 383 பேரும், திருவள்ளூரில் 293 பேரும்,  காஞ்சிபுரத்தில் 193 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments