மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 சிறுவர்கள் பலி

0 734
மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 சிறுவர்கள் பலி

மத்திய பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர்.

அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கத்னி நகரில் வீடு ஒன்றின் சுவர் கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த குழந்தைகள் மீது சுவர் சரிந்து விழுந்துள்ளது. இதில் ஆறு வயதுக்குட்பட்ட 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலியானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments